/ தமிழ்மொழி / குழப்பம் தரும் தமிழ்ச் சொற்களுக்கு படங்களுடன் விளக்கம்!
குழப்பம் தரும் தமிழ்ச் சொற்களுக்கு படங்களுடன் விளக்கம்!
தமிழ் இலக்கணத்தில் மயங்கொலி பிழைகளை நீக்க உதவும் நுால். தமிழில் உள்ள ‘ல, ள, ழ, ர, ற, ண, ன, ந’ எழுத்துகளை பயன்படுத்தும் போது பிழைகள் ஏற்படுகின்றன. அவற்றை நிவர்த்திக்க விளக்கம் தரப்பட்டுள்ளது. புத்தகத்தில், ‘ல, ள, ழ’ அமைந்த சொற்கள், ‘ன, ண’ வேறுபாடுள்ள சொற்கள், ‘ர, ற’ வேறுபட்ட சொற்களுக்கு பொருள் வேறுபாடு படங்களுடன் விளக்கப்பட்டுள்ளது. சொற்களை பிழையின்றி எழுதவும் பேசவும், கற்பிக்கிறது. ஆங்கில வழியில் படிப்போருக்கு தமிழ் மொழியை எளிதாக கற்க துணை புரிகிறது. மொழியை சரியாக உச்சரிக்க தெரியாதோருக்கு வழிகாட்டும் வகையில் உள்ளது. சொற்களை படங்களுடன் விளக்கும் நுால். – வி.ராமலிங்கம்




