/ வரலாறு / எழில் கொஞ்சும் அஜந்தா – எல்லோரா
எழில் கொஞ்சும் அஜந்தா – எல்லோரா
சிறப்பு மிக்க இந்திய கலை பொக்கிஷங்களை அடக்கியுள்ள அஜந்தா, எல்லோரா பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ள நுால். வரலாற்று பின்னணியுடன் ஆய்வுப் பார்வையில் விரிவாக எழுதப்பட்டுள்ளது.இந்த நுால், ஒன்பது இயல்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அஜந்தா குடவரை பற்றி முழுமையான அறிமுகத்தை முதல் இயலில் விளக்குகிறது. உரிய படங்கள் செய்திகளை புரிய வசதியாக சேர்க்கப்பட்டுள்ளன. கலை வரலாற்றை தெளிவாகக் கூறுகிறது. கையைப் பிடித்து, நேரில் அழைத்துச் சென்று காட்டுவது போல் கட்டுரைகள் அமைந்துள்ளன. பவுத்த, சமண சமயங்களை புரிந்து கொள்ள ஏதுவான தகவல்களும் நுாலில் நிறைந்துள்ளன. சிற்பங்களும், ஓவியங்களும் தமிழகம் மற்றும் இலங்கை கலைச் சின்னங்களுடன் ஒப்பிடப்பட்டுள்ளன. எளிய நடையில் அமைந்த அறிவு நுால்.