/ இசை / எழில்தரும் எண் சீர்

₹ 150

காதல், வீரம், சோகம், பழம் பெருமை, எதிர்கால நம்பிக்கை என்று எட்டு சீர் விருத்தப்பாக்களால் அமைந்த நுால். பாடல்கள் வழியாக கருத்துகள் கொட்டப்பட்டுள்ளன. ஓசைநயம் தான் பாடல்களின் உயிர் மூச்சு. அது நிறைய கைவந்திருப்பதை, ‘ஒவ்வொரு நாளும் பொய்கள் சொல்லி மக்களுக்கே வைப்பார் கொள்ளி’ என அரசியல் அறத்தை பாடி இருக்கிறது. கதிரில்லா இருள் போல என வறியவர் படும் துன்பத்துக்கு நல்ல உவமை கூறப்பட்டுள்ளது. அப்பராக தோன்றி நடித்த சிவாஜி கணேசன், கட்ட பொம்மனாக காட்சி தந்ததை பெருமையுடன் குறிப்பிடு கிறது. தோற்றம், நடிப்பு, பாடல் என வித்தியாசத்தை காட்டுகிறது. திறமையை உணர்ந்தால் உயர்வு நிச்சயம் என்கிறது. சந்தத்துடன் படிக்க வேண்டிய கவிதை நுால். – சீத்தலைச்சாத்தன்


முக்கிய வீடியோ