/ கதைகள் / எழுதுகோல் சிறுகதைச்சரம்

₹ 100

தமிழக தலைமைச் செயலக வளாகத்தில் நடந்தவற்றை சிறுகதையாக தரும் நுால். ‘இதயக்கனி’ என்ற தலைப்பில் ஒரு கதை. முன்பு வாசலில் பழம் விற்றவர், முதியவராகி இப்பொழுதும் பழம் விற்கிறார். அவரிடம் பழம் வாங்கிய பழைய அதிகாரி விலை கேட்கிறார். வியாபாரி விலை சொல்ல பேரம் பேசாமல் கொடுக்கிறார். வாங்கிய பழங்களை அதிகாரி காருக்குள் பழக்கடைக்காரர் வைக்கிறார். அதன் மதிப்பு நிச்சயமாக அதிகம் இருக்கும். இதுதான் ஏழைகளின் அன்பு வெளிப்பாடாக மலர்ந்துள்ளது.‘ஆக்கிரமிப்பு’ என்ற கதையில் சில வரிகள் நெஞ்சை கவ்விப்பிடிக்கின்றன. ஆதி மனிதன் வாழ்வதற்கு தேர்ந்தெடுத்தது ஆறுகளின் ஓரங்களை தான். காரணம் காற்றும், தண்ணீரும். திட்டமிடுதல் என்றால், அறைக்குள் உட்கார்ந்து பேசுவதும் எழுதுவதும் அல்ல. சம்பந்தப்பட்ட மக்களை நேரில் சந்திக்க வேண்டும் என்பது போல் எழுதப்பட்டுள்ள கதைகளின் தொகுப்பு நுால்.– சீத்தலைச் சாத்தன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை