/ வரலாறு / ஐந்தாவது சுதந்திரம்
ஐந்தாவது சுதந்திரம்
சமூக நிலையை பிரதிபலிக்கும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். கருப்பு நிறம் உடைய பெண்கள் மீது சமூகம் வைக்கும் பார்வை, திருமணம் அமைவது, தங்க நகையை பிரதானமாக கருதுவது போன்ற கருத்தை, ‘நிற ஆர்வம்’ என்ற தலைப்பில் தந்து சிந்திக்கத் துாண்டுகிறது. பயணம் பற்றிய சுவாரசியத்தை, ‘இஸ்டம் போல பிரயாணம்’ என்ற கட்டுரை எடுத்துரைக்கிறது. சமூக அக்கறையுடன் உள்ள சினிமாவின் தேவையை வலியுறுத்துகிறது. ஊழலை சாட்டையால் அடிக்கிறது. இயற்கையிடம் கற்றுக் கொள்ள வேண்டியதை, ‘சுறுசுறுப்புள்ள எறும்புகள்’ நேர்த்தியாக புரிய வைக்கிறது. பெண்கள் முன்னேற்றத்தின் படிநிலைகளை விவரிக்கிறது. சவால்களின் தேவையை கூறுகிறது. பழங்கால சொற்கள் நிரம்பியுள்ள மறுபதிப்பு நுால். – டி.எஸ்.ராயன்




