/ மருத்துவம் / பெருகிவரும் நீரிழிவு நோயும் விழிப்புணர்வும்
பெருகிவரும் நீரிழிவு நோயும் விழிப்புணர்வும்
நீரிழிவு நோயின் தாக்கம் பற்றி எடுத்துரைக்கும் நுால். நோயை உருவாக்கும் காரணங்கள் விரிவாக அலசப்பட்டு உள்ளன.நீரிழிவு நோயின் அறிகுறி முக்கிய தகவலாக தரப்பட்டுள்ளது. நோயால் பாதிப்படைவது சிறுநீரகங்கள் தான். சிறுநீரக பாதிப்பே, ஏனைய மற்ற நோய்களுக்கு காரணமாய் அமைவதை குறிப்பிடுகிறது. நீரிழிவு நோயாளிக்கான உணவுப் பழக்கம் குறித்து விரிவாக விளக்குகிறது. முறையாக மருத்துவர் அறிவுறுத்தல் படி, மருந்து, மாத்திரை எடுத்துக்கொள்வது இன்றியமையாதது என புலப்படுத்துகிறது. தவிர்க்க வேண்டிய உணவுகள் பற்றிய தகவல்கள் விளக்கிச் சொல்லப்பட்டுள்ளன. உடல் நலத்தில் அக்கறையுள்ள நுால்.– டாக்டர் கார்முகிலோன்