/ புத்தக மதிப்புரை / ேஹாமரின் ஒடிஸி (காவியச் சுருக்கம்)
ேஹாமரின் ஒடிஸி (காவியச் சுருக்கம்)
கிரேக்கப் புலவரால் இயற்றப்பட்ட இதிகாசத்தை சுருக்கமாக தரும் நுால். மிகப்பெரும் போருக்கு பின் தாயகமான இதாகாவுக்கு திரும்ப போராடும் வீரன் ஒடிஸியின் போராட்டம் நிறைந்த பயணத்தை கூறுகிறது. இதாகா அரசனான ஒடிஸியை தீவில் சிறை பிடிக்கிறாள் கலிப்சோ. மனைவி, மகனை காண கடற்கரையை நோக்கியவாறு தவிக்கிறான் ஒடிஸி. அவன் இறந்துவிட்டதாக கருதி, மனைவி ராணிபெனிலோபுக்கு மறுமண ஏற்பாடு நடக்கிறது. ஒடிஸி எப்படி மீண்டு வருகிறான் என்ற புதிருக்கு விடையை அழகாக சொல்கிறது. வழியில் ஒடிஸியும், அவனது வீரர்களும் ஆபத்தான பல பகுதிகளையும், அச்சுறுத்தும் மிருகங்களையும், ஒற்றைக் கண் அரக்கர்களையும் எதிர்கொள்வதை சுவாரசியமாக கூறும் நுால். – டி.எஸ்.ராயன்




