/ பயண கட்டுரை / நாடுகளைக் கண்டுபிடித்த நாயகர்கள்!
நாடுகளைக் கண்டுபிடித்த நாயகர்கள்!
பாய்மரங்களை பயன்படுத்தி கடலில் பயணம் செய்து நாடுகளை கண்டறிந்தோர் பற்றிய விபரங்களை தொகுத்து தரும் நுால். பெருங்கடல்களில் ஆபத்துகளை தாண்டி சாதித்தவர்களின் துணிச்சலை அறிய தருகிறது. கடல் வழி கண்டுபிடிப்புகளின் காலம் பற்றிய முதல் கட்டுரை சுவாரசியம் தருகிறது. தொடர்ந்து, சாகச பயணங்கள் மேற்கொண்டு நாடுகளை கண்டறிந்து, உலகின் ரகசியத்தை அம்பலத்திய மாலுமிகள் குறித்த விபரங்கள் உள்ளன. வாழ்க்கை குறிப்புகளும் தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாலுமியும் மேற்கொண்ட பயணத்தில் சந்தித்த இன்னல்கள், அவற்றை தாண்டி சாதித்த விபரங்கள் நம்பிக்கை ஊட்டும் வகையில் தரப்பட்டுள்ளன. புதிய நிலப்பரப்புகளை கண்டறிந்தது குறித்து சுவாரசிய தகவல்கள் அடங்கிய புத்தகம். – சிவா




