/ அரசியல் / ஐடியாஸ் பார் எ ப்ராகிரஸிவ் கவர்ன்மென்ட் (ஆங்கிலம்)
ஐடியாஸ் பார் எ ப்ராகிரஸிவ் கவர்ன்மென்ட் (ஆங்கிலம்)
அரசு நிர்வாகத்தில் வளர்ச்சிக்கு உரிய ஆலோசனை வழங்கும் நுால். திடக்கழிவு மேலாண்மை குறித்து அரிய ஆலோசனைகளை வழங்குகிறது. பொதுத்துறை நிறுவனங்கள், சமய சார்புடைய அறக்கட்டளை மற்றும் ஹிந்து அறநிலையத்துறைக்கும் ஆலோசனைகளை பரிந்துரைக்கிறது. மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி செயல்பாடுகள் குறித்து கூறப்பட்டுள்ளது. இந்தியா முழுமைக்குமான மதுவிலக்கு கொள்கை, தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு, பழங்குடி மக்கள் ஏற்றம், பெண் விடுதலை, சமூக நீதியை விளக்குகிறது. அரசின் தணிக்கை துறை, நிதி நிலை அறிக்கை சீரமைப்பில் பரிந்துரைகளை முன் வைக்கிறது. அரசு நிர்வாகத்தில் சீர்மை ஏற்பட ஆலோசனை தரும் நுால். – புலவர் சு.மதியழகன்




