/ வாழ்க்கை வரலாறு / இலக்கியத்தில் வாழ்வியல் முன்னேற்றச் சிந்தனைகள்

₹ 150

இருபதாம் நுாற்றாண்டில் உருவான வாழ்வியல் சிந்தனைகள் குறித்து ஆய்வு செய்து தகவல்களை தொகுத்து தரும் நுால். தன்னம்பிக்கையால் சாதனை படைத்த சான்றோர்களின் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. தன்னம்பிக்கை வளர்க்கும் எழுத்தாளர்கள் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி, தமிழ்வாணன், மெர்வின் கருத்துக்கள், முயற்சிகள் தொகுத்துரைக்கப்பட்டுள்ளன. இளைஞர்களுக்கு பகையாக, தடையாக அமையும் சோம்பல், மனத்தளர்ச்சி, நம்பிக்கையின்மை, பொறுமையின்மையை எடுத்துக்காட்டுகிறது. அவற்றை களையும் வழிமுறைகளை கூறுகிறது. வெற்றியின் ரகசியத்தை விளக்கி தன்னம்பிக்கையூட்டும் நுால். –முனைவர் ரா.பன்னிருகைவடிவேலன்


முக்கிய வீடியோ