/ புத்தக மதிப்புரை / இலங்கை வரலாற்றை தொடங்கிய இந்திய இளவரசன் விஜயன்

₹ 325

வரலாற்றை பின்புலமாக கொண்டு புனையப்பட்டுள்ள நாவல். இலங்கையின் தொடக்க கால வரலாற்றை விவரிக்கிறது. மேற்கு வங்கத்திலிருந்து இலங்கை சென்ற இளவரசன் விஜயன், அங்கு வாழ்ந்த இரக்கமற்ற அரக்க குணம் கொண்டோரை ஒடுக்கி, நாகரிகத்தை விதைக்க இளவரசி குவேனியை மணந்து கொள்கிறான்; நாட்டைக் கைப்பற்றுகிறான். பின், ஷத்திரிய குல பெண்ணை மணந்து மணிமுடி சூட்டுவதாக கூறுகிறான். அதன்படி பாண்டிய நாட்டு இளவரசி கயல்விழியை மணமுடிப்பதாக கதை நகர்கிறது. இதற்கிடையில் குவேனி கொல்லப்படுகிறாள். காதல், வீரம், போர்த்திறன் பற்றியும் விவரிக்கப் பட்டுள்ளது. வரலாற்று பின்புலத்தில் அமைந்த நாவல். – புலவர் சு.மதியழகன்


புதிய வீடியோ