/ பயண கட்டுரை / தென்னாப்பிரிக்கக் காடுகளில்...
தென்னாப்பிரிக்கக் காடுகளில்...
தென்னாப்பிரிக்கக் காடுகளில் பயணம் செய்த அனுபவத்தை கதை போல் விவரிக்கும் நுால். விலங்குகள், பறவைகள், மீன்கள் குறித்து சுவாரசியம் மிக்க தகவல்கள் உள்ளன. பயணத்தின் போது ஒவ்வொரு பகுதியிலும் கிடைத்த உணவு குறித்த விபரங்கள் தரப்பட்டு உள்ளன. பாலைவனப் பகுதியில் பாயும் நதியின் டெல்டாவில் தங்கி சுற்றுலா மேற்கொண்டதை சுவாரசியம் குன்றாமல் கூறுகிறது. வினோத கரையான்கள் குறித்த தகவல்கள் வியப்பு தருகின்றன. உணவு விடுதிகளில் வினோத அசைவ உணவு விபரங்கள் புதுமையாக உள்ளன. ஆப்ரிக்க நாடுகளில் நிலவும் அரசியல், கலாசாரம் பற்றிய செய்திகள் சமூக பின்னணியுடன் தரப்பட்டுள்ளன. விலங்குகள் குறித்த தகவல்கள் ஆர்வம் ஏற்படுத்துகிறது. எளிய நடையில் அமைந்த பயண நுால். – ஒளி