/ ஆன்மிகம் / இந்து சமய வாழ்வியல்... சனாதன தர்மம்
இந்து சமய வாழ்வியல்... சனாதன தர்மம்
சனாதன தர்மத்தை அற்புதமாக விளக்கும் நுால்.சனாதன தர்மத்தை அடையாளப்படுத்த ஏற்பட்ட பெயரே, ‘ஹிந்து’ என்கிறார் காஞ்சி மஹா பெரியவர். அது வெறும் சடங்கு முறை அல்ல; வாழ்வுக்கான வழிமுறை. வழிபாட்டை மட்டும் சொல்லவில்லை; வாழ்வு முறையை சொல்கிறது. அரசு சின்னத்தில் இருக்கும் வாக்கியம் சத்யமேவ ஜயதே. அதாவது, வாய்மையே வெல்லும்.சனாதனம் என்ற வார்த்தையின் நடைமுறை அறிவை விளக்கி தெளிவாக விடையளிக்கிறது. சனாதனம் என்றால் என்ன என்பதை எளிய நடையில் விளக்குகிறது. ஹிந்து மதத்தைச் சேர்ந்தோர் மட்டுமின்றி, அனைவரும் படித்து பயன் பெற வேண்டிய விளக்கமான புத்தகம்.– இளங்கோவன்