/ புத்தக மதிப்புரை / இந்திய மொழிகளில் தமிழ் மொழிச் சொற்கள்
இந்திய மொழிகளில் தமிழ் மொழிச் சொற்கள்
பிற மாநில மொழிகளில் தமிழ்ச் சொற்கள் வழங்கி வருவதை பட்டியலிட்டுள்ள நுால். மலையாளத்தில் தமிழ் சொற்கள் அதிகம் பயன்பாட்டில் உள்ளதை எடுத்துக்காட்டுகிறது. மரம், பூ, பழம், மழை, நெல் போன்ற சொற்கள் மலையாளத்தில் சிறு மாற்றத்துடன் வழங்குவதை சுட்டிக்காட்டுகிறது. ஹிந்தி மொழியில் ராஜா, ராணி, சவால் போன்ற சொற்கள் பயன்பாட்டில் உள்ளதை கூறுகிறது. சில மொழிகளில் பல சொற்கள் சிறு மாற்றங்களுடன் உள்ளதை எடுத்துக்காட்டுகளுடன் தருகிறது. வங்கம், உருது, சமஸ்கிருதம், தெலுங்கு மொழிகளில் வழங்கும் தமிழ் சொற்கள் பற்றியும் அறியத் தருகிறது. மாநில மொழிகளில் தமிழ் சொற்கள் பயன்பட்டு வருவதை அறியத் தரும் நுால். – ராம்




