/ வரலாறு / இந்திய நாகரிகம்
இந்திய நாகரிகம்
இந்திய நிலப்பரப்பில் நிலவிய நாகரிகங்களின் வரலாற்றை கூறும் நுால். தொன்மை இடங்களை நேரடியாக ஆய்வு செய்து பயணக் கட்டுரையாகவும், வரலாற்றை தெளிவுபடுத்தும் விதமாகவும் எழுதப்பட்டுள்ளது.‘தோலாவிராவின் ரகசியங்கள்’ என்ற தலைப்பில் அமைந்த கட்டுரையில் துவங்கி, ‘வாரணாசியும் நம்பிக்கையும்’ என முடிகிறது. ஒவ்வொன்றிலும் வரலாறு மற்றும் பண்பாட்டு தகவல்கள் நிறைந்துள்ளன. தமிழில் எளிய நடையில் உள்ளது. இந்திய மண்ணின் மாண்பை புரிந்து கொள்ள உதவும் நுால்.– ஒளி