/ கதைகள் / இன்றிரவு?

₹ 170

பரபரப்பான திருப்பங்களுடன் அமைந்த நாவல் நுால். மருத்துவ தொழில் நுட்பத்தில் இதய மாற்று அறுவை சிகிச்சையை முன்வைத்து தனித்துவமாக உருவாக்கப்பட்டுள்ளது. குமுதம் இதழ் நிறுவிய ஆசிரியர் எஸ்.ஏ.பி., நுாற்றாண்டில் சிறப்பு வெளியீடாக மலர்ந்துள்ளது. இந்த நாவல் கதை பல கோணங்களில் இருந்து உருவாக்கப்பட்டு, ஒரே புள்ளியில் சாதுர்யமாக முடிக்கப்பட்டுள்ளது. ராணிமங்கலம் இளைய ஜமீன்தாரின் குழந்தை பருவ நண்பர் கோவிந்தசாமி. ஜமீந்தாருக்கு ஆசை நாயகியாக படித்த பெண் தாராவை ஏற்பாடு செய்து, கடைசி நேரத்தில் அது நிகழாமல் நழுவுகிறது. கோபமடைந்த ஜமீன்தார் ஒரு வழக்கில் கோவிந்தசாமியை சிக்க வைக்கிறார். சிறையில் தண்டனை முடிந்து வெளியே வரும் கோவிந்தசாமியின் வெறுப்பு, தாரா மீது திரும்புகிறது. அவளை கொல்ல திட்டமிடுவது, மிகவும் பரபரப்புடன் காட்சி மயமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இன்ஜினியர் சரவணனை மணம் முடிக்கும் தாரா, தம்பி பாஸ்கரையும் உடன் அழைத்துக் கொள்கிறாள். கெட்ட பழங்கங்கள் நிறைந்த பாஸ்கர், சரவணனின் தங்கை நிம்மியை வளைக்க முயல்கிறான். வெகுளியான நிம்மி, புத்திசாலித்தனத்துடன் செயல்படுவது தான், முடிவை நோக்கி இழுத்து செல்கிறது. ஒவ்வொரு கதாபாத்திரமும் பல்வேறு கதைக்களங்களை கொண்டுள்ளன. அவற்றை மையக்கதையுடன் நிகழ்வுகளாக இணைத்து சித்திரம் போல் தீட்டப்பட்டுள்ளது. மர்மம் நிறைந்த நிகழ்வுகள் அடுக்கடுக்காக அமைந்து, வாசிப்பதில் விறுவிறுப்பை ஏற்படுத்துகின்றன. வித்தியாசமான கண்ணோட்டத்துடன் படைக்கப்பட்டுள்ள நாவல். – ராம்


சமீபத்திய செய்தி