/ புத்தக மதிப்புரை / இந்து ஆலயங்களின் ஆன்மிக அனுபவங்கள்
இந்து ஆலயங்களின் ஆன்மிக அனுபவங்கள்
இந்தியா மற்றும் அயல்நாடுகளில் அமைந்துள்ள, 50 ஹிந்து கோவில்களின் வரலாற்று பின்னணி மற்றும் ஆன்மிகச் சிறப்பை எடுத்துரைக்கும் நுால். வேதாரண்யம் பகுதியில் உள்ள சிவன் கோவிலில் தொடங்கி, இலங்கை நுணாவில் வைரவர் கோவிலுடன் நிறைவடைகிறது. வேதாரண்யம் மறைக்காடர் கோவிலை இலங்கை, யாழ்ப்பாணத்தில் உள்ள பக்தர்கள் வணங்கி வருவதை விபரமாக வழங்குகிறது. பரஞ்சோதி முனிவரும், தாயுமானவரும் வேதாரண்யத்தில் தோன்றி தொண்டு செய்த பின்னணியை அறியத் தருகிறது. மலேஷியா, பத்துமலை முருகன் கோவிலின் ஆன்மிக சிறப்புகளை அறியத் தருகிறது. பிரபல ஹிந்து கோவில்களை பற்றி தகவல்கள் தந்து தரிசிக்க வழிகாட்டும் புத்தகம். – முகிலை ராசபாண்டியன்




