/ மருத்துவம் / இனிமை தந்து இன்னல் நீக்கும் இனிமா

₹ 170

உடல் கழிவுகளை வெளியேற்றும் வழிமுறை கூறும் நுால். கழிவு தடைபட்டால் நோய்களுக்கு ஊற்றுக்கண்ணாகி விடும் என எச்சரிக்கிறது. இயற்கை முறையில் குடலை துாய்மைப்படுத்த எளிய, ‘இனிமா’ பயிற்சி பற்றி விளக்கப்பட்டு உள்ளது. உணவிலும், உடையிலும் மாற்றங்களால் உடல் வெப்பமுற்று மலச்சிக்கல் ஏற்படுவதை குறிப்பிடுகிறது. பசியின்மை, ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு காரணமாகி விடுவதை உரைக்கிறது. இனிமா என்பது மலக்கழிவை நீக்கி குளிர்விக்கும் செயல்முறை என்கிறது. அதை செயல்படுத்தும் முறை பற்றி, உடற்கூறியல் படங்களோடு விளக்கப்பட்டுள்ளது. திருமூலர் பாடல்களை முன்வைத்து அலசுகிறது. உடல் நலம் பேண வழிகாட்டும் நுால். -– பின்னலுார் விவேகன்