/ கட்டுரைகள் / இனிய இல்லறத்திற்கு அருமையான ஆலோசனைகள்

₹ 125

அன்பு என்பது பொறுமையின் விளைச்சல். கணவன், மனைவி சண்டை வந்தாலும் நீர்க்குமிழியாக வேண்டும். அப்போது தான் இல்லறம் இனிக்கும். கணவருக்கு சாதுரியமாக பேச வராது என்றால், மனைவி பெரிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. குறை சொல்லக்கூடாது என்பதை சின்ன சின்ன நிகழ்ச்சிகள் மூலம் எடுத்துக்காட்டும் நுால்.உறவினரோ, நண்பரோ வீடு கட்டி விட்டால் பொறாமை படக்கூடாது. அது உடல் நிலையை பாதிக்கும். கணவனும், மனைவியும் குணாதிசயங்களை அறிந்து மாறிக் கொண்டால் இல்லறம் இனிக்கும்.திருமணம், அன்பின் அடித்தளம், கருவுறுதல் பிள்ளைப்பேறு, பிள்ளை வளர்ப்பு, சச்சரவுகளில் விட்டுக் கொடுத்தல் என புரிந்து வாழ கற்றுக் கொடுக்கும் புத்தகம்.– சீத்தலைச் சாத்தன்


முக்கிய வீடியோ