/ கட்டுரைகள் / இப்படிக்கு நம்பிக்கை

₹ 170

வாழ்க்கையில் தவிர்க்க இயலாத சவால்களை சமாளிக்கும் வழிகளை உரைக்கும் நுால். சவால்களை வெற்றிகரமாக நிறைவேற்றி கடந்து செல்லும் ஆற்றலை உருவாக்குவது நம்பிக் கை. அதுதான் கைகளை பிடித்து அழைத்துச் செல்லும் நண்பனாக செயல்படுவதை எடுத்துக்கூறுகிறது. நம்பிக்கையை எண்ணம், செயல்பாடு மற்றும் வாழ்வியல் முறையில் விதைக்கும் அரிய பணியை எடுத்து சொல்கிறது. ஒவ்வொரு கட்டுரையும் நம்பிக்கையூட்டும் செய்திகளை உள்ளடக்கமாக கொண்டுள்ளன. குட்டிக்கதை போல் வழங்கி இருப்பது சிறப்பாக உள்ளது. மனம் சோர்வடையும் போதெல்லாம் துணையாக இருந்து உதவும் வகையில் உள்ளது. இளைஞர்கள், ஆசிரியர்கள், தொழில் முனைவோர், சமூக முன்னேற்றத்தை விரும்புவோர் அவசியம் வாசிக்க வேண்டிய நம்பிக்கை நுால். – சிவா


புதிய வீடியோ