/ வாழ்க்கை வரலாறு / இப்படித்தான் உருவானேன்
இப்படித்தான் உருவானேன்
அரசியல், இலக்கியம், சமயம், சமூகம், திரை சார்ந்த அனுபவங்களை உடைய சுயசரிதை நுால். போராட்டங்களில் சிறைவாசம் செய்த தகவல்களையும் தருகிறது. குடிநீருக்காக உண்ணாவிரதம் இருந்து மீண்டதை சொல்கிறது.பெருந்தலைவர் காமராஜர் சந்திப்பு, அரசியலில் தொடர்பு நிரல்படக் கூறப்பட்டுள்ளது. வள்ளலாரைப் பின்பற்றி புலால் உணவு நீக்கியது பற்றி விவரிக்கிறது. ஆட்சியின் அவலங்கள், கள்ளுக்கடை திறப்பு பற்றிய உண்மைகளை எடுத்துரைக்கிறது. காமராஜர், காந்திஜி போன்றோரிடம் கொண்ட பற்று பற்றி சொல்கிறது.வாழ்வில் ஏற்பட்ட ஏற்ற, இறக்கங்கள், சுயசிந்தனையுடன் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அன்றிலிருந்து இன்று வரை உள்ள அரசியல் போக்கை அறிந்து கொள்வதற்கு உதவும் நுால்.– பேராசிரியர் ரா.நாராயணன்