/ கதைகள் / இரண்டு மர்மங்கள்

₹ 310

இரண்டு நாவல்களின் தொகுப்பு நுால். இயற்கை வளங்களில் நடக்கும் சுரண்டலை மையப்படுத்தும் முதல் நாவல், மர்ம முடிச்சுகளை அவிழ்த்து செல்கிறது. காட்டை அழிப்பதற்காக நல்லவர்களை வேட்டையாடும் கடத்தல்காரர்கள், உடந்தையான போலீசார் செயலை தோலுரிக்கிறது. இறுதியில் நீதி வெல்வதாக காட்டப்பட்டுள்ளது. காதலை சுற்றிய மர்மங்களை உடைக்கும் மற்றொரு நாவல். ரயிலில் கிடைக்கும் கடத்தல் பொருள் மீது, கஸ்டம்ஸ் அதிகாரியின் நடவடிக்கையை கூறுகிறது. இரண்டும் பதற்றம், பரபரப்புடன் நகர்கிறது. கதை, நாவல் எழுத விரும்புவோருக்கு பயன்படும் நுால்.– டி.எஸ்.ராயன்


புதிய வீடியோ