/ புத்தக மதிப்புரை / இரட்டைமலைச் சீனிவாசன்
இரட்டைமலைச் சீனிவாசன்
சட்டசபையில் நியமன உறுப்பினராக, ஆங்கிலேய அரசிடம் தாழ்த்தப்பட்ட மக்கள் உயர்வுக்காக உரிமைகளை பெற்று தந்ததை எடுத்துக் கூறும் நுால். பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுத்ததற்காக அவமானப்பட்டது, கல்லுாரியில் சந்தித்த புறக்கணிப்புகள் பற்றி கூறப்பட்டுள்ளது. சென்னை மாகாணத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பில் முதல் பட்டதாரியாக விளங்கியதை குறிப்பிடுகிறது. ஆதிதிராவிடர் மகாஜன சபையை தொடங்கியது பற்றிய விபரங்கள் உள்ளன. மக்கள் நலனுக்காக போராடிய முயற்சியை பாராட்டி பட்டங்களை ஆங்கிலேய அரசு வழங்கியதையும் குறிப்பிடுகிறது. போராட்டம் நிறைந்த வாழ்க்கை நிகழ்வுகளையும் எடுத்துரைக்கிறது. காட்சிமயமாக நாவலைப் போல விறுவிறுப்புடன் அமைந்துள்ள நுால். – புலவர் சு.மதியழகன்




