/ கட்டுரைகள் / இருட்டிலிருந்து வெளிச்சம்

₹ 240

பக்கம்: 320 சிறந்த படைப்பிலக்கியவாதி என இலக்கிய அன்பர்களால் போற்றப்படும் அசோகமித்திரன், தனது திரைப்பட உலக அனுபவங்களை, தனக்கே உரிய இலக்கிய பிரக்ஞையுடன் எழுதியுள்ள கட்டுரைகளின் தொகுப்பாக வெளிவந்துள்ள நூல். ஆறு பகுதிகளாக உள்ள சிறு கட்டுரைகளில் பதிவு செய்யப்பட்டுள்ள பல தகவல்கள் அனேகமாக, திரை உலக, இலக்கியத்துறை அன்பர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அசோகமித்திரன் ஜெமினி ஸ்டூடியோவில் பல நிலைகளில் பணி புரிந்த போது, கிடைத்த தகவல்களின் பின்னணியில் கட்டுரைகள் அமைந்துள்ளன.சினிமா குறித்து அவரது பார்வை, அகில உலக அளவிலும், சர்வதேச அளவிலும் பரந்துபட்டு இருப்பதை இந்நூல் உணர்த்துகிறது. ஒரு இலக்கிய படைப்பாளியின் கண்ணோட்டத்தில், திரையுலகு குறித்து எழுதப்பட்டுள்ள இந்த தொகுப்பு நூல், சினிமாத்துறையினரிடையே நல்ல வரவேற்பைப் பெறும் என நம்பலாம்.


முக்கிய வீடியோ