/ வாழ்க்கை வரலாறு / இசை முரசு நாகூர் இ.எம்.ஹனீபா – 100
இசை முரசு நாகூர் இ.எம்.ஹனீபா – 100
இசைக்கலைஞர் நாகூர் இ.எம்.ஹனீபா வாழ்க்கையில் நிகழ்ந்த 100 சம்பவங்களை தொகுத்து கூறும் நுால். பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள சம்பவங்களை தருகிறது. முயற்சியே முன்னேற்றம் என்பதற்கு இணங்க, 11 வயதில் பள்ளியில் பாடியது குறித்து கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து, 13ம் வயதில் திருமண விழாவில் பாடியதையும், 15ம் வயதில் பக்க வாத்தியங்களுடன் மேடையில் கச்சேரி நடத்தியதையும் குறிப்பிடுகிறது. இஸ்லாமிய பக்திப் பாடல்கள், கட்சிப் பாடல்கள், பொதுப் பாடல்கள் என்று பல நிலைகளில் மேடையில் நிகழ்ச்சிகள் நடத்திய விபரங்கள் தரப்பட்டுள்ளன. சட்ட மேலவையில் உறுப்பினராக இருந்தது பற்றிய விபரங்களும் உள்ளன. உழைக்க நம்பிக்கை தரும் நுால். – புலவர் ரா.நாராயணன்




