/ கதைகள் / இதயப் பூக்கள்
இதயப் பூக்கள்
அன்பு, உதவும் எண்ணம், மனிதநேயம், தேசபக்தியை அழகாகப் படம் பிடித்துக் காட்டும் அற்புதமான கதைகளின் தொகுப்பு நுால். காதல் வலையில் சிக்கிய பெண்ணை காதல் கதையின் மூலமே மருத்துவர் மீட்டெடுத்த அத்தியாயம் வியக்கச் செய்யும். ராணுவத்தில் பணியாற்றும் வீரர்களின் தேசபக்தியும், அர்ப்பணிப்பு உணர்வும், சாதாரண மனிதர்கள் என்ற கதையில் ஆழமாக உணர முடிகிறது. முதுமையை தவிர்க்க இயலாது. ஆனால், மனதில் அன்பு துளிர்த்தால் தனிமையும், வறுமையும் விலகி விடும் என உருக்கமாக சொல்கிறது.மதுக் கடைகள் மூடுவதை மையமாக வைத்து எழுதிய கதையில், சமுதாய சீர்திருத்தத்திற்கான சீற்றத்தைக் காண முடிகிறது. அன்பின் சுகந்தத்தை நுகர்ந்து புத்துணர்வு பெறுவோம்.– தி.க.நேத்ரா