/ வாழ்க்கை வரலாறு / ஜெயலலிதாவின் மனம் திறந்து சொல்கிறேன்...
ஜெயலலிதாவின் மனம் திறந்து சொல்கிறேன்...
ஜெயலலிதாவை பத்திரிகையாளர் ரஜத் நேரடியாக பேட்டி கண்டு, தொடராக வெளிவந்த நுால் வடிவம் கண்டிருக்கிறது. வாசகருடன் பேசுவது போன்ற உரைநடையில் உள்ளது.ஜெயலலிதாவின் தன்னம்பிக்கையும், தைரியமும் ஒவ்வொரு வார்த்தையிலும் பிரதிபலிக்கிறது. எந்த ஒளிவு மறையும் இல்லை. யாருக்கும் அஞ்சவே இல்லை.ஆடை மீதான பிரியம், பள்ளி படிப்பு, நடிகையான கதை, பருவ வயதில் ஏற்பட்ட ஈர்ப்பு, எம்.ஜி.ஆர்., உடன் சந்திப்புகள், படப்பிடிப்பில் நிகழ்ந்த சம்பவங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசியல் வரலாற்றில் முக்கிய இடம்பிடித்த ஜெயலலிதாவின் சுயசரிதை, நிச்சயம் ரசிக்க வைக்கும்.–-- சி.கலாதம்பி