/ கதைகள் / கடைசி ஆசை

₹ 120

கருத்து பெட்டகமாக மலர்ந்துள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். வாழ்வில் அன்றாட நிகழ்வுகளில் அவலங்களை பிரதிபலிக்கிறது. ஹோட்டலில் வயது முதிர்ந்த சர்வருக்கு ஏற்படும் கை நடுக்கம் குறித்த கதை, தாங்க முடியாத துக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. கொலையை, நீதிபதி கண்ணால் பார்த்தாலும், சட்டப்படி சாட்சி இல்லாவிட்டால் குற்றவாளியை விடுதலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தை கூறுகிறது. வரதட்சணை என்பது வார்த்தை ஜாலங்களால், கொள்ளையடிக்க துடிப்போரால் நடத்தப்படும் மாயநாடகம் என அற்புதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இளைய சமுதாயம் தன்னைத் தானே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய கேள்விக் கணையாக கதைகள் உள்ளன. மீண்டும் மீண்டும் படித்து, பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய புத்தகம். – டாக்டர் கார்முகிலோன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை