/ கவிதைகள் / காசினிக் காடு
காசினிக் காடு
தமிழர் பண்பாட்டையும், மண்ணின் மணத்தையும் உணர்த்தும் கவிதைகளின் தொகுப்பு நுால். மரங்கள், விலங்குகளின் வாழ்வை காட்டு மண்ணுடன் கலந்து வழங்குகிறது. கடற்கரையையும் கண்ணுக்குள் நிறுத்துகிறது. சங்கப் புலவர்கள் வழங்கிய காட்சிப் படிமத்தை கவிதைகளில் காண முடிகிறது. தமிழ்க் கவிதை உலகத்திற்கு புதிய பாதையை இவை அமைக்கும்.மனித வாழ்வு, தனக்குத் தானே எல்லை வகுத்து கொண்டாலும் தொடர்ந்து பயணிக்கும். ஒவ்வொருவரும் உலகுக்கு பங்களிப்பை வழங்கியபடியே இருப்பர். அது, வெறுமையாவதே இல்லை. நமக்குப் பின்னாலும் வானம் இருக்கும்; பூமி இருக்கும்; கடல் இருக்கும்; காற்று இருக்கும்; கற்பனையும் இருக்கும். இந்த உண்மையை உரைக்கும் கவிதை நுால். – முகிலை ராசபாண்டியன்