/ புத்தக மதிப்புரை / களத்தில் கற்றவை

₹ 220

விற்பனை துறையில் 40 ஆண்டுகளுக்கு மேலாக களத்தில் கண்டவை, கற்றவற்றை பகிரும் நுால். தகவல் தொடர்புகள் அதிகம் இல்லாத காலத்தில், மருந்து மற்றும் பொருட்களை மார்க்கெட் செய்யப்பட்ட விதம், கையாண்ட வழிமுறைகள் பற்றி விளக்கமாக கூறப்பட்டுள்ளது. சொல்லப்பட்டிருக்கும் மார்க்கெட்டிங் நுட்பங்கள், இந்த காலத்திற்கும் பொருந்துவது வியப்பாக உள்ளது. ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும், ‘இந்த அனுபவத்தில் கற்றது’ என முத்தாய்ப்பாய் எழுதியிருப்பது சிறப்பு. இக்காலத்திற்கும் பொருத்தமான மார்க்கெட்டிங் ‘டிப்ஸ்’ ஆக இருக்கிறது. இளைஞர்களுக்கு வழிகாட்டுதலாகவும் அமைந்துள்ளது. மார்க்கெட்டிங் நுட்பங்களை வெறும் ‘தியரி’யாக சொல்லாமல், அனுபவ ரீதியாக தரும் நுால். – ஜி.வி.ஆர்.,


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை