/ கட்டுரைகள் / கால்காணி

₹ 80

இயற்கை சார்ந்த விழிப்புணர்வு கட்டுரைகளின் தொகுப்பு நுால். இயற்கை வேளாண்மை தான் நோய்களை தடுக்கும் என உறுதிபட சொல்கிறது. உணவு மாறிப்போனதை உணவின் வரலாறு எடுத்துக்காட்டுகிறது. வேளாண்மை அறிவு கொண்டு சுற்றம், உறவு என கூட்டமாக வாழ பழகியது குறித்து விவரிக்கிறது. பசுமை புரட்சி திட்டம், 1991ல் உலகமயமாக்கல் திட்டத்தால் உருக்குலைந்தது என சொல்கிறது. ரசாயன உர வேளாண்மையால் பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் நோயாளி எண்ணிக்கை கூடி விட்டதாக கூறுகிறது. இயற்கை வேளாண்மையின் தோற்றம் பற்றி விவரிக்கிறது. கால்காணி நிலம் என்று சொல்லப்படும் 33 சென்ட் நிலத்தில் வேளாண்மை செய்து பலன் பெறலாம் என விளக்கம் தருகிறது. இளம் விவசாயிகள் கையில் இருக்க வேண்டிய புத்தகம். – சீத்தலைச்சாத்தன்


புதிய வீடியோ