/ புத்தக மதிப்புரை / கல்லும் கதை சொல்லும்
கல்லும் கதை சொல்லும்
தொல்லியல் சான்றுகள் அடிப்படையில் அமைந்த வரலாற்று ஆய்வு நுால். செங்கல்பட்டு, செய்யூர் பகுதி பற்றிய செய்திகளை கொண்டுள்ளது. கல்வெட்டுகளில் செய்யூர், அதன் அமைவிடம், பெயர் காரணம், இலக்கிய ஆதாரங்கள் என, பல்வேறு வகையில் தகவல்கள் திரட்டி தரப்பட்டுள்ளன. கோவில் சார்ந்து பாடப்படும் பிள்ளைத்தமிழ் இலக்கியத்தில் உள்ள தகவல்களும் தெளிவுடன் தரப்பட்டுள்ளன. செய்யூரை சுற்றியுள்ள கிராமங்களில் காணப்படும் தொல்லியல் தளங்களில், தக்க முறையில் திரட்டப்பட்ட தகவல்கள் இடம் பெற்றுள்ளன. இங்கு, ஒரு கோழிக்கு நடுகல் அமைந்துள்ளது, வியப்பு தரும் செய்தியாக உள்ளது. சுமை தாங்கி, மந்தைக்கல், சதிக்கல், வழிபாட்டுக்கல், மந்திரக்கல் என, பல வகை ஆதாரங்களை முன்வைக்கும் ஆய்வு நுால். – ஒளி




