/ இலக்கியம் / கல்யாணி
கல்யாணி
படிப்பதையும், எழுதுவதையுமே வாழ்க்கையாகக் கொண்டு வாழ்ந்தவர், பிரபல எழுத்தாளர் வல்லிக்கண்ணன். அவரது புனைவுகள் அற்புதமானவை; நுட்பமானவை. அந்த கால சமூகத்தை படம் பிடிப்பவை. அவை, சிறுகதைகளாகவும் மலர்ந்துள்ளன. அவற்றில் ஒரு பகுதியை தொகுத்துள்ள நுால்.கடந்த, 1955 முதல், 1991 வரை எழுதியவை தொகுக்கப்பட்டுள்ளன. நெஞ்சுக்கு நீதியாக விளங்குகிறது. தமிழ் இலக்கியத்தில் பொக்கிஷமாக போற்ற வேண்டியது!– எஸ்.குரு