காமராஜர் காவியம்
செந்தில் பதிப்பகம், 2, பெருமாள் முதலி தெரு, ராயப்பேட்டை, சென்னை -14, (பக்கம்:1068) மும்பை குறிஞ்சி பதிப்பகத்தினர், மும்பையிலேயே ஒளி அச்சு செய்து மும்பையிலேயே அச்சிடப்பட்ட நூல் என்ற பெருமையும் கொண்ட இந்நூல், காமராஜரை காவியமாக்கிய படைப்பு. ஆசிரியர் எழுதியுள்ள காவியம் உருவான கதையும் சுவைக்கிறது. நூல் விருது பீடம், 71 தலைப்புகளிலும், தமிழகப் பீடம் 111 தலைப்புகளிலும், தேசியப்பீடம், 85 தலைப்புகளிலுமாக, மொத்தம் 267 தலைப்புகளாகப் பகுக்கப்பட்டு காவியம் சமைத்துள்ளார்."படிப்பதுகூட மக்களுக்குப் பயன்பட வேண்டும் பயன்படாது என்றால் அதைப் படிக்கவே வேண்டாம் என்பதில் தெளிந்தவர் போன்ற எளிய இனிய வரிகளில் காவியம் படைக்கப்பட்டுள்ளது. படிப்பவர்களை மெய்சிலிர்க்கச் செய்யும். இது ஒரு மக்கள் காவியம்.கல்விக்கண் திறந்தவர் காவியம். இந்நூலைப் படிப்பதே அவருக்கு நாம் செய்யும் அஞ்சலியாகும்.