/ இலக்கியம் / கம்பன் இலக்கிய மாட்சிமை
கம்பன் இலக்கிய மாட்சிமை
கம்பன் படைப்புகளை அறிமுகம் செய்யும் நுால். கம்பன் இயற்றிய நுால்கள், கம்பன் உணர்த்தும் இறை நம்பிக்கை, கம்பன் காட்டிய வாழ்வியல் நெறி, கம்பன் காட்டிய கடமை உணர்வு, இலக்கிய மேற்கோள்கள், ஓசை நயம், போர்க்காட்சிகள், பணிவுடைமை உள்ளிட்ட 20 கட்டுரைகள் உள்ளன. சிலை எழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, திருக்கை வழக்கம், கம்பராமாயணம், ஏரெழுபது, மும்மணிக் கோவை சிறப்புகளை கூறுகிறது. கம்பனின் இறை நம்பிக்கை, சகோதர பாசம், வாழ்க்கை நெறி, கடமை உணர்வு, சந்தநயம், போர்க்கள காட்சிகள் உள்ளிட்ட செய்திகளை சான்றுகளுடன் எடுத்துரைக்கிறது. உழவர் பெருமை மற்றும் வேளாண்மை சிறப்புகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. கம்பன் கவிநயத்தை அறிய உதவும் நுால். – வி.ராமலிங்கம்




