/ கவிதைகள் / கம்பன் கண்ட சொல்லின் செல்வன்

₹ 400

அனுமன் புகழை கம்பர் கவிதை வழியாக விவரிக்கும் நுால். அனுமனை தொண்டனாக ஏற்றுக்கொண்டார் ராமபிரான். அசோகவனத்தில் சிறையிருந்த சீதைக்கு ராவணன் செய்த கொடுமைகளை கண்டு, ‘அண்டர் நாயகன் அருள் துாதன் யான்’ எனக்கூறி உயிர் காத்த அனுமன் செயலை குறிப்பிடுகிறது. வீடணன் நற்குணங்களை ராமனிடம் எடுத்து கூறியது விவரிக்கப்பட்டுள்ளது. சஞ்சீவி மலையை பெயர்த்து லக்குவன் உள்ளிட்டோரை காத்த அனுமனை மார்புறத் தழுவி, ராமன் போற்றியதை குறிப்பிடுகிறது. தெய்வநிலை பெற்று, சிரஞ்சீவியாக என்றென்றும் வாழும் உன்னத நிலை பெற்ற அனுமனை புகழும் கம்பன் பாடல்களை ஆராயும் நுால். – புலவர் சு.மதியழகன்


சமீபத்திய செய்தி