/ ஆன்மிகம் / கம்பனில் காத்திருப்பு
கம்பனில் காத்திருப்பு
கம்பராமாயண கருத்துகளை விளக்கும் நுால். கதாபாத்திரங்கள் பற்றி பல கோணங்களில் விளக்கம் தரப்பட்டுள்ளது. ராமாயண கதையில் காத்திருப்பு என்ற சொல்லின் பொருள் விளக்கப்பட்டுள்ளது. எதை காத்தல் என்பதற்கு பொறுமையை காத்தல் என்கிறது. சீதை கதாபாத்திரம் பொறுமையை மட்டும் காக்கவில்லை; குல பெருமை, கற்பு நெறியை, ராமன் புகழை காப்பதை சொல்கிறது. சீதையை தர்மம் காத்தது என்பதை அனுமன் வாயிலாக அறிவிக்கிறது. இந்த புத்தகம் 10 கட்டுரைகளின் தொகுப்பாக உள்ளது. அகலிகையின் சாபம் நீங்க காத்திருந்த வரலாற்றையும் சொல்கிறது. இலங்கிணியின் சாபம் நீங்கிய நிகழ்ச்சியை குறிப்பிடுகிறது. ராமாயண சொற்பொழிவு செய்வோருக்கு வேண்டிய தகவல்கள் உள்ள நுால்.– புலவர் ரா.நாராயணன்




