/ புத்தக மதிப்புரை / கங்கை கொண்ட சோழீச்சரம்

₹ 400

கங்கைகொண்ட சோழீச்சரம் என்ற சிவன் கோவில் பற்றிய வரலாற்று செய்திகளுடன் அமைந்த நுால். மன்னர்கள், கல்வெட்டுகள், சிற்பங்கள், செப்புத்திருமேனிகள் என எண்ணற்ற தகவல்களை சான்றுகளுடன் விளக்குகிறது. கோவில் அமைப்பு, சிற்பங்கள், செப்புத்திருமேனிகள், கல்வெட்டு சாசனங்கள் பற்றிய செய்திகளை தருகிறது. திருக்கோவில் வரைபடங்களோடு தகவல்களை அள்ளித் தருகிறது. மகா மண்டபம், திருமதில் போன்றவற்றில் இருந்து அகற்றப்பட்ட கற்களைக் கொண்டே, கொள்ளிடம் ஆற்றில் கீழணை கட்டப்பட்டதாக குறிப்பு தருகிறது. மன்னர்களின் கல்வெட்டு சாசனங்கள், செப்புத் திருமேனிகள் பற்றி விரிவாக ஆராய்ந்து பதிவு செய்யப்பட்டுள்ளது. அரிதான தரவுகள் உடைய களஞ்சியம் இந்நுால். – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு