/ வரலாறு / கங்கையும் – கடாரமும்
கங்கையும் – கடாரமும்
சோழர் வரலாற்றில் முக்கிய படையெடுப்புகள் பற்றி எடுத்துக் கூறும் நுால். கல்வெட்டு, வரலாற்று சுவடுகள், கள ஆய்வுகள் வழியாக கிடைத்த தகவல்கள், அயல்நாட்டு அறிஞர்களின் ஆராய்ச்சி குறிப்புகளுடன் எளிய நடையில் விவரிக்கப்பட்டுள்ளது. ராஜேந்திர சோழன் கங்கை கொண்ட தரை வழிப் போர், கடாரம் வென்ற கடற்வழிப் போர் என இரண்டு பெரும் பிரிவுகளாக புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும், 11 அத்தியாயங்களில் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. கங்கையை கடந்து சோழனின் தரைப்படை வெற்றி வாகை சூடியதை உரிய வரைபடங்கள், வரலாற்று தடயங்கள் வழியாக நிறுவுகிறது. கல்வெட்டு செய்திகளும் தக்கவாறு தரப்பட்டுள்ளன. தொடர்ந்து கடற்படை கடாரத்தை வென்றதை கூறுகிறது. வரலாற்றை கதை போல் சொல்லும் நுால். – ஒளி




