/ கவிதைகள் / கண்ணாடியில் தெரியும் பறவை
கண்ணாடியில் தெரியும் பறவை
சமூகத்தை நுட்பமாக நோக்கி படைக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு நுால். என்றைக்கும் பெய்யும் வான், மனிதர்கள் நாங்கள், அவரவர் காடு, புயலுக்கு முன், தோட்டத்துடன் அலைபவர்கள், இருளில் மின்னும் பூனையின் கண்கள் உட்பட, 69 தலைப்புகளில் உள்ளன. அனுபவங்களை மென்மையான சொற்களை கோர்த்து வெளிப்படுத்துவதை படைப்புகளில் காண முடிகிறது. முதல் கவிதையில், ‘விற்ற காசை மட்டும் வீட்டுக்கு எடுத்து செல்கிறார் கையேந்தி பவன் கடைக்காரர்’ என, நகரத்தின் இரவு நேரத்தை காட்சிமயமாக சித்தரிக்கிறது. அன்றாடம் கண்முன் இருப்பவற்றை புதிய வண்ணங்கள் தீட்டி கவனிக்க வைக்கிறது. அன்றாடச் செயல்பாடுகளை புதிய கோணத்தில் காட்டி சிந்திக்க வைக்கிறது. இனிய கவிதைகளின் தொகுப்பு நுால். – மதி




