/ கட்டுரைகள் / க.ப.அறவாணரின் மொழி அரசியல்
க.ப.அறவாணரின் மொழி அரசியல்
பேராசிரியர் க.ப.அறவாணரின் மொழி சார்ந்த சிந்தனைகள் அடங்கிய கட்டுரைகளின் தொகுப்பு நுால். தாய்மொழியில் கல்வி புகட்ட வேண்டியதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் கருத்துகள் அடங்கியுள்ளன. மொழிப்பாடம் வழியாக சிந்தனையை வளர்த்தல், மொழியும் மானுடவியலும், மொழிப்பாடம் சுமையா, தமிழர் உணர்வு மீண்டும் எழ உட்பட, 13 தலைப்புகளில் கட்டுரைகள் அமைந்துள்ளன. ஐரோப்பிய நாடான பிரான்சில் சாதாரணர் முதல், அதிபர் வரை தாய்மொழிக்கு, முக்கியத்துவம் தருவதை தனித்துவமாக வெளிப்படுத்துகிறது. தாய்மொழி வழியாக கல்வி பெறுவதால் சிந்தனைத்திறன் வளரும் என சுட்டிக்காட்டுகிறது. கற்றலில் தாய்மொழியின் முக்கியத்துவம் குறித்த கருத்துக்கள் அடங்கிய நுால். – ராம்




