/ வாழ்க்கை வரலாறு / கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி
கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் என்ற அடைமொழிகளுக்கு சொந்தக்காரரின் வீர வரலாற்றை தொகுத்து தந்துள்ள நுால். பிறப்பு முதல் இறப்பு வரை அனுபவித்த ஏற்றத்தாழ்வான நிகழ்வுகள் கண்ணீரை வரவழைக்கின்றன. சிதம்பரனார் எதற்காக, எப்படி கப்பல் ஓட்டினார் என்பதை உணர்த்துகிறது. நீதிமன்ற நடுவரிடம் கேள்வி கேட்ட துணிச்சலை கூறி வீரத்தை அறிய வைக்கிறது. சிறையில் செக்கு இழுத்த போது பாரத மாதாவை சுற்றியதாக எண்ணிய பாங்கை சிலாகித்து விவரிக்கிறது. பாடுபட்டு கப்பலை வாங்கியபோது ஏற்பட்ட இன்னல்களை கூறுகிறது. ஆங்கிலேயர் நிறுவனங்களுக்கு எதிராக செயல்பட்ட தீரத்தை அறிய வைக்கிறது. அறம், வீரத்துடன் அமைந்த சிதம்பரனாரின் வாழ்வு நிகழ்வுகளை அறிய தரும் நுால். – சீத்தலைச் சாத்தன்




