/ வாழ்க்கை வரலாறு / கர்ம வீரர் காமராஜர்
கர்ம வீரர் காமராஜர்
தென்னாட்டு காந்தி, கர்ம வீரர், பெருந்தலைவர், கல்விக்கண் திறந்தவர், ஏழைப் பங்காளன் என்றெல்லாம் அறியப்பட்டவர் காமராஜர். வாழும் வரை வழிகாட்டியாக திகழ்ந்தார். ஏழை எளிய மக்கள் உயர்வுக்கு உழைத்து வந்தார். இந்திய அளவில் வளர்ச்சிக்கு முன் உதாரணமாக திகழ்ந்தவர். சேவையில் சாதனை படைத்த காமராஜரின் வாழ்க்கை சுருக்க வரலாறு, சிறு கையேடாக தயாரிக்கப்பட்டுள்ளது. அவர் ஆற்றிய தொண்டின் முக்கிய பகுதிகள் இதில் சொல்லப்பட்டு உள்ளன. அவரது வாழ்வை சுருக்கமாக அறிந்து கொள்ள உதவும் நுால்.– வசந்தன்