/ வரலாறு / கறுப்பின புரட்சி

₹ 150

நிறவெறியால் கறுப்பின மக்கள் அமெரிக்காவில் பட்ட இன்னல்களை கூறும் நுால். வெள்ளையர் அடிமை வியாபாரத்தை, நிறவெறியுடன் இணைத்ததை சொல்கிறது. போராட்டங்களில் அதிகம் சுட்டு கொல்லப்படுவது கறுப்பினத்தவர் என்கிறது. அடிமை விலங்கை உடைக்க முயன்ற ஆபிரஹாம் லிங்கனின் வீரத்தை பேசுகிறது. அமெரிக்க பூர்வ குடிகள், ஆசியாவில் இருந்து குடியேறியோர் என்கிறது. உலகில் உள்ள துப்பாக்கியில், 42 சதவீதம் அமெரிக்கர்களிடம் இருப்பதாக கூறுகிறது. ஐரோப்பியர் குடியேற்றத்தால், தொல்குடி அமெரிக்கர் பண்பாட்டு சிதைவு குறித்து அலசுகிறது. செவ்விந்தியர் வாழ்க்கை முறை, உழைப்பு, ஒழுக்க வாழ்வை சொல்கிறது. குடியேறியோரை வெளியேற்ற வலியுறுத்திய அட்டகாசம் குறித்தும் தகவல்களை பகிரும் நுால். – டி.எஸ்.ராயன்


சமீபத்திய செய்தி