/ கதைகள் / காதல் ஒரு கலை வேண்டாமே கௌரவக் கொலை!
காதல் ஒரு கலை வேண்டாமே கௌரவக் கொலை!
பணம், பதவி வந்தால் நல்ல மனம், குணம் பறந்தோடி விடும் என எச்சரிக்கும் நாவல். அன்பை புறந்தள்ளி ஆணவம் நிலை கொள்வதால் ஏற்படும் பாதிப்பை எடுத்துரைக்கிறது. மாப்பிள்ளையாய் வந்தவனை மரணத்தில் தள்ளி, மகளின் வாழ்க்கையை பாலைவனமாய் ஆக்கிய பாதக தந்தையை மையப்படுத்தி உள்ளது. ஜாதியை மறுக்கும் பெண்ணின் வாழ்க்கை என்னவாயிற்று என்பதை சித்தரிக்கிறது. நல்ல உள்ளங்கள் இருப்பதால் தான், வாழ்க்கை அர்த்தமுள்ளதாகிறது என்பதை எடுத்துரைக்கிறது. நாவலை தொடர்ந்து சில சிறுகதைகளும் தொகுப்பில் அணிவகுத்துள்ளன. நியாயம் சாகும் போது குமுறலை வெளிப்படுத்துகிறது. ஜாதி எல்லையை தாண்டிய சிந்தனை கதைகளின் தொகுப்பு நுால். – டாக்டர் கார்முகிலோன்




