/ புத்தக மதிப்புரை / காதலால் காதலைக் காதலி
காதலால் காதலைக் காதலி
தவறுகளை மன்னிக்கும் மனம் வேண்டும் என உணர்த்தும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். நவீன உலகில் தடுமாறிய மகள் ஒரு கணம் உணர்ந்து, பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டு, படிப்பில் கவனம் செலுத்துவதை, ‘சித்திரமே விசித்திரமே’ கதை பாடமாக புகட்டுகிறது. திருமணமான பெண் மனைவி மட்டுமில்லை, குழந்தையின் தாய் என்ற பொறுப்பை, ‘கண்ணாடிப்பூக்கள்’ கதை ஆழமாக உணர்த்துகிறது. பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்த குமுதாவுக்கு ஒரு கைக்குழந்தை. கணவர் தவிக்க விட்டு செல்ல நிர்கதியானவருக்கு, திருடர் கொடுத்த ஆறுதலை, ‘இரவில் ஒரு வானவில்’ கதை வெளிச்சம் பாய்ச்சுகிறது. பேரன், தாத்தா உறவை, ‘செஸ் விளையாடலாமா’ கதை, உணர்வுப்பூர்வமாக பகிர்கிறது. பார்த்த, கேட்ட சம்பவங்களை கதையாக தரும் நுால். – டி.எஸ்.ராயன்




