/ சிறுவர்கள் பகுதி / காட்டுக்குள் சிம்போனி!

₹ 100

விலங்குகளை கதாபாத்திரங்களாக உருவாக்கி நீதி புகட்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள படக்கதை நுால். தரமான தாளில் வண்ணமயமாக தயாரிக்கப்பட்டுள்ளது. காட்டில் மிருகங்களில் சில தற்பெருமையால் தாங்கள் தான் உயர்ந்தவர் என காட்டிக்கொள்ள போட்டி போடுகின்றன. இதனால், அவற்றுக்கு இடையே பெரும் சண்டை உருவாகிறது. இதற்கு தீர்வு கோரி ராஜா சிங்கத்திடம் வன விலங்குகள் முறையிடுகின்றன. முறையீட்டை கேட்டு விலங்குகளுக்குள் ஏற்பட்ட பகையை தீர்த்து வைக்கிறது சிங்கம். இது தான் படக்கதை யின் மையக்கருத்தாக உள்ளது. ரசிக்கும் வகையில் படங்களும், சுவாரசியமான விவரிப்புகளும் புத்தகத்தை வாசிக்கத் துாண்டுகின்றன. எளிய நடையில் குழந்தைகளுக்கு அறிவூட்டி உற்சாகப்படுத்தும் படக்கதை நுால். – ஒளி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை