/ கட்டுரைகள் / கட்டுரைக் களஞ்சியம்

₹ 200

இலக்கியம், சினிமா என பல பொருள் குறித்த தகவல்களை உடைய கட்டுரைகளின் தொகுப்பு நுால். விரும்பத்தக்க முறையில் முத்தான 38 கட்டுரைகள் தரப்பட்டுள்ளன. விரும்பும் செய்திகளுடன் எளிதில் மனதில் பதியும் வண்ணம் உருவாக்கப்பட்டு உள்ளது. சொல்லவந்தவற்றை, எளிய சொற்களால் குழப்பம் இன்றி விளக்குகிறது. திருக்குறளில் காமம், தமிழ் இலக்கியத்தில் அழகு என்பது போன்ற தலைப்புகளில் தகவல்கள் தேடி எடுத்து எழுதப்பட்டுள்ளன. ஆக்கங்கள் தனிச்சிறப்புடன் திகழ்கின்றன. முன்னாள் ஜனாதிபதி மறைந்த அப்துல் கலாம், பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், சினிமா பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் போன்றோர் குறித்த தகவல்களும் தொகுத்து தரப்பட்டு உள்ளது. கட்டுரைக் களஞ்சிய நுால். – ராம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை