/ மருத்துவம் / நோ யுவர் பாடி (பகுதி – 2)
நோ யுவர் பாடி (பகுதி – 2)
உடல்நலம் சார்ந்த விழிப்புணர்வை அறிவியல் அடிப்படையில் விளக்கி புரிய வைக்கும் நுால். கேள்வி- – பதில் வடிவில் உள்ளது. வாசிக்க சுலபமாகவும், மனதில் பதியும் வகையிலும் உள்ளது. உடல் இயங்கும் விதம், எலும்பு மற்றும் தசை, குழந்தை, பெண்கள் உடல்நலம், கண் பாதுகாப்பு, நுரையீரல் மற்றும் சிறுநீரகம், சிகிச்சை கருவிகள், மருத்துவ விளக்கங்கள் போன்று 15 தலைப்புகளை உள்ளடக்கியது. எளிமையான கேள்விகளுக்கு, மருத்துவ அடிப்படை பதில்கள் தரப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு பொது அறிவு தரும் வகையில் உள்ளது. போட்டி தேர்வுகளுக்கு பயன்படும் வகையில் உள்ளடக்கத்தை உடைய நுால். –- இளங்கோவன்