/ கட்டுரைகள் / கோள்களைத் தாண்டி...

₹ 150

தன்னம்பிக்கை கட்டுரைகளின் தொகுப்பு நுால். எதைக் கேட்டாலும் இல்லை என்று சொல்ல எவராலும் முடியும்; ஆனால், உண்டு என்று சொல்ல உணர்ந்தவர்களால் தான் முடியும் என்ற வெற்றி வாழ்வின் அரிச்சுவடிப் பாடத்தை எடுத்து சொல்கிறது. எண்ணம், ஆர்வம், எழுச்சி, வேகம், செயல், வீரம், காலம், நேரம் அறிந்து கருத்துடன் செயலாற்றும் தீரம் இவை தான், சாதிக்கத் துடிப்போருக்கு தகுதிகள் என எடுத்து சொல்கிறது. சாதனையாளர்கள் தொடர்புடைய சம்பவங்கள் விவரித்து சொல்லப்பட்டுள்ளன. கற்றுக்கொண்டே இருப்பது தான் வாழ்க்கை என விளக்குகிறது. எழுச்சி மிக்க எண்ணமே ஏற்றம் தரும் என்கிறது. உன்னதமான விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. சாதிக்கத் துடிப்போருக்கு உதவும் புத்தகம். – டாக்டர் கார்முகிலோன்


முக்கிய வீடியோ